மகிந்தவுக்கு வேட்புமனு வழங்கி நிலையில் தேர்தல் வன்முறை அதிகாரிப்பு – கபே
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் தீவிமடைந்துள்ளதாக கபே எனப்படும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போட்டியிடுவதற்கான வேட்புமனு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்து சில மணி நேரத்தில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 12 மணித்தியாலத்திற்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 6 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் பல இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார பதாதைககள் மற்றும் கொடிகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட வேட்புமனு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இந்த வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
லுனுகம்வெகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரலிகெல வலயத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே அமைப்பு கூறியுள்ளது.எல்லகெல பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியின் அலுவலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த பதாகை சேதமாக்கப்பட்டுள்ளது.தங்கல்ல பிரதேசத்தில் இருந்த ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் நிழற்படங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.