Breaking News

"அர­சியல் தீர்வைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக தேர்­தலை பயன்­ப­டுத்திக் கொள்­ளவும்"

வடக்­கு–­கி­ழக்கில் வாழும் தமிழ் மக்கள் நிரந்­தர அர­சியல் தீர்­வைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான நல்ல சந்­தர்ப்­ப­மாக எதிர்­வரும் பொதுத் தேர்­தலை பயன்­ப­டுத்த வேண்டும். 




எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஐக்­கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளி­யா­க­வுள்­ளதை மனதில் கொண்டு, தமிழ் மக்­களின் அர­சியல் பலம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புத்தான் என்­பதை உணர்ந்து உணர்வு பூர்­வ­மான முறையில் இத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்க வேண்­டி­யது தலை­யாய கட­மை­யாகும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா. அரி­ய­நேத்­திரன் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலும், தமிழ் மக்­களின் நிலைப்­பாடும் என்ற தொனிப்­பொ­ருளில், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர். பா. அரி­ய­நேத்­திரன் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த காலங்­களில் பல்­வேறு அச்­சு­றுத்­தல்கள், கெடு­பி­டிகள் என்­ப­வற்­றுக்கு மத்­தி­யிலும் எமது தமிழ் மக்கள் கொண்ட கொள்­கை­களில் பற்­று­றுதி கொண்­ட­வர்­க­ளாக சகல தேர்­தல்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளித்து தமிழ் உணர்வை பறை­சாற்­றினார்.

இன்று இத்­த­கைய சூழ்­நிலை தணிந்து, எமது மக்கள் ஓர­ள­வேனும் சுதந்­தி­ர­மாக நட­மா­டவும், தமது கருத்­துக்­களை பரி­மாறிக் கொள்­ளவும் ஏற்ற சூழல் உத­ய­மா­கி­யுள்­ளது. இந்த சுமு­க­மான சூழலில் எமது தமிழ் மக்­களின் வாக்­க­ளிப்பு வீதம் அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­துடன், அதன் பலா­பலன் எமது மக்­க­ளுக்கு விடிவைத் தரும் முடிவை அளிப்­ப­தாக இருக்க வேண்டும்.

பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலில் நாம் யாருக்கு வாக்­க­ளிக்கப் போகின்றோம் என்­பது முக்­கி­ய­மல்ல. மாறாக நாம் எந்தக் கட்­சிக்கு வாக்­க­ளிக்­கின்றோம். இதனால் எமக்கு ஏற்­படப் போகும் நன்மை தீமை என்­ன­வென்­பதே முக்­கியம்.

இந்த வகையில் தமிழ் மக்­க­ளா­கிய நாம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்கத் தவ­று­வோ­மாயின் நாம் பல வருட கால­மாக பல கோணங்­களில் நடத்­திய போராட்­டங்கள், எமது மக்கள் சிந்­திய இரத்­தங்கள், தியா­கங்கள், உயிர் இழப்­புக்கள், சொத்­தி­ழப்­புக்கள் உள்­ளிட்ட பல விட­யங்கள் அர்த்­த­மற்­ற­தாகி விடும்.

எனவே நாம் இத் தேர்­தலை தியாக வேள்­வி­யாக கருதி, ஒன்­று­பட்ட சக்­தி­யாக தமி­ழர்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கீழ் அணி­தி­ரண்­டுள்­ளனர் என்­பதை உல­கிற்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்றார்.