மஹிந்த போட்டியிடும் கட்சி, சின்னம் என்ன? 9ஆம் திகதி மேடையேறுவார்! என்கிறார் பேச்சாளர்
மக்களின் கோரிக்கையை தட்டிக்கழிக்க தனக்கு உரிமை இல்லை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நேற்று மெதமுலனவில் வைத்து விஷேட அறிவிப்புச் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் எந்த கட்சியில்? எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை.
'எந்தச் சந்தர்ப்பத்திலும், எப்போதும் நான் கட்சிக்கும் நாட்டுக் கும் துரோகமிழைக்கவில்லை. நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கவென அனைத்து மக்களையும் எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டுமன்றி மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தங்களோடு இணைத்து கொள்ள வேண்டும்.' என இந்த விஷேட உரையில் சுட்டிக்காட்டிய முன்னள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ எந்தவொரு இடத்திலும் தான் சுதந்திரக் கட்சியில் போட்டியட்ப் போவதாகவோ அல்லது தனித்து போட்டியிடப் போவதாகவோ அறிவிக்கவில்லை.
இந் நிலையில் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் ருவன் வெலிவிட்டவை கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்று வினவியது.
இதற்கு பதிலளித்த ருவான் வெலிவிட்ட,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியடப் போவதக அறிவித்துள்ளார். எனினும் கட்சி, மற்றும் சின்னம் தொடர்பில் எவ்வித அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை. எவ்வாறாயினும் எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுறத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மேடை ஏறுவார் என நாம் நம்புகின்றோம். அதற்கான வய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
அவ்வாறு மேடை ஏறுவாறாயொஇன் அதற்கு முன்பதகவே கட்சி சின்னம் தொடர்பில் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். என்றார்.