Breaking News

மஹிந்த தேர்தலில் போட்டியிடுவது சவாலாக அமையாது : கிரியெல்ல

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் போட்டியிட்டாலும் வெற்றியீட்டுவது ஐக்கிய தேசியக் கட்சியேயாகும் என கட்சியின் சிரேஸ் உப தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது கட்சிக்கு சவாலாக அமையாது. எந்த சக்தி தேர்தலுக்கு வந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை மாற்ற முடியாது.

கடந்த ஜனவரி மாதம் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை விரட்டியடிக்க மக்கள் ஆணை ஒன்றை வழங்கினர், இந்த மக்களின் ஆணை அதனை விடவும் அதிகளவில் எதிர்வரும் நாடாளுமன்றத் தோதலில் கிடைக்கும்.

மஹிந்த எதிர்த்தரப்பினை இணைத்துக் கொண்டு தேர்தலில் களமிறங்குவதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும் என லக்ஸ்மன் கிரியெல்ல சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.