மைத்திரியின் முடிவினால் மேற்குலக இராஜதந்திரிகள் நிலைகுலைவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பா ளராகப் போட்டியிடுவதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, அனுமதி அளிக்கப் பட்டுள்ளதானது, கொழும் பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகளுக்கு அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவைப் போட்டியிட அனுமதிக்கும், இந்த முடிவு கொழும்பைத் தளமாக கொண்ட இராஜதந்திர சமூகத்துக்கு குறிப்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவை கடந்த அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தி, மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில் மேற்குலக நாடுகள் முக்கிய பங்கு வகித்திருந்தன.
அத்துடன் மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த பின்னர், மேற்குலகுடனான இராஜதந்திர உறவுகள் வலுப்பெற்று வந்த சூழ்நிலையிலேயே, மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.