Breaking News

வெள்ளைவேன் கலாசாரமா புதிய இலங்கையா வேண்டும்? ரணில் கேள்வி

ஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சியை பின்­ந­கர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வதா? 


அல்­லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்தி அபி­வி­ருத்­தி­யு­டனும் சிறந்த பொரு­ளா­தா­ரத்­துடனும் கூடிய புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வதா என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஒன்­றி­ணைந்து நல்­லாட்­சியை மேலோங்க செய்து ஒழுக்க பண்­பு­க­ளுடன் கூடிய நாட்டை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வாக்­கு­று­தி­க­ளுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட சிந்­த­னைகள் அன்றி 60 மாதங்­களில் புதிய இலங்­கையை உரு­வாக்கும் ஐந்து அம்ச திட்­டத்தை நாட்­டிற்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் இந்த திட்­டத்தை வெற்­றிப்­பெற செய்­ய­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மாத்­தளை தம்­புளை நகரில் நேற்று முன் தினம் நடைப்­பெற்ற பிர­சார கூட்­டத்தில் கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் பிர­தமர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டு மக்கள் ஒரு­போதும் எதிர்­பார்த்­தி­ராத வகையில், தோற்­க­டிக்க முடி­யாது என்று கூறப்­பட்ட சர்­வ­தி­கார போக்­குடன் கூடிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் குடும்ப ஆட்­சி­யினை தோற்­க­டித்தோம். எனினும் ஜன­வரி 8 ஆம் திகதி மக்­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சியை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அதற்­கான தற்­போது சந்­தர்ப்பம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

சிறுப்­பான்மை அர­சாங்கம் என்ற 100 நாட்­களில் மக்­க­ளுக்கு அழித்த வாக்­கு­று­தி­களை நாம் நிறை­வேற்றிக் காட்­டி­யுள்ளோம். முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளினால் நிறை­வேற்ற முடி­யாது என்று கூறிய பல்­வேறு விட­யங்­களை நாம் நிறை­வேற்­றி­யுள்ளோம். அத்­தி­யா­வ­சிய பொரு­ட­களின் விலை­க­ளையும் குறைத்­துள்ளோம். பெற்றோல்,டீசல் விலை­க­ளையும் குறைத்தோம். அரச ஊழி­யர்­களில் சம்­ப­ளத்தை அதி­க­ரித்தோம். இதனை முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளினல் நிறை­வேற்ற முடி­யாமல் போனது. ஆனால் பாரா­ளு­மன்ற சிறுப்­பான்மை அர­சாங்கம் என்ற வகையில் நிறை­வேற்றிக் காட்­டினோம்.

100 நாள் வேலைத்­திட்­டத்­தி­னூ­டாக பாரிய திட்­டங்­களை சாதித்தோம். ஆகவே 100 நாட்­களில் பாரிய வேலைத்­திட்­டங்­களை சாதிக்க முடியும் என்றால் ,ஐந்­தாண்டு காலத்­திற்கு ஆட்சி பொறுப்பு எமக்கு கிடைக்கப் பெற்றால் எம்மால் எதனை செய்ய இய­லாது. பத்து வரு­ட­மாக இந்த நாட்டை சீர­ழித்­தது போதா­தென்று மீளவும் பிர­த­ம­ரா­கு­வ­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷ அவ­தாரம் எடுத்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை மாத்­தி­ர­மின்றி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் இரண்­டாக பிள­வுப்­ப­டுத்­தி­யது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வாகும். தற்­போது சுந்­திரக் கட்சி இரண்­டாக பிள­வுப்­பட்­டுள்ள நிலையில், அந்த கட்­சி­யினால் எவ்­வாறு ஆட்சி அமைக்க முடியும். இத்­த­கைய நிலையில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் எவ்­வாறு பிர­த­ம­ராக முடியும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராகும் திட்டம் கன­விலும் நடக்­காது. அவரை பிர­த­ம­ராக்க மாட்டேன் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­திப்­பட கூறி­யுள்ளார். இந்த நிலை­மையில் முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் எவ்­வாறு பிர­த­ம­ராக முடியும்.

இந்­நி­லையில் நான் ஆட்­சியை கைப்­பற்றி நாட்­டிற்கு துரோகம் இழைக்­கப்­போ­வ­தாக கூறு­கின்­றனர். ரணில் சுமார் 15 வரு­ட­மாக நாட்டை ஆட்சி செய்­யப்­போ­வ­தாக எதிர்க்­கட்­சிகள் பர­வ­லாக குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.

15 வரு­ட­மாக நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு நான் ஒன்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அல்ல. அவரை போன்று அதி­கா­ரத்தை தக்­க­வைத்துக் கொள்ள வேண்­டிய தேவை எனக்­கில்லை. எனக்கு 15 வரு­ட­மாக நாட்டை ஆளும் அள­விற்கு அதி­கார மோகம் என்­னிடம் இல்லை.

நாட்­டிற்கு என்னால் ஆற்ற வேண்­டிய சேவை­களை நிறை­வேற்­றிய பின்னர் நானே அர­சி­ய­லி­ருந்து ஒதுங்கி விடுவேன் . ஆட்­சியை தக்­க­வைத்துக் கொள்­ள­வேண்­டிய ஆசை எனக்கு ஒரு­போதும் வந்­தது கிடை­யாது. ஐந்­தாண்டு கால நிறைவில் புதிய இலங்கை நான் உரு­வாக்­குவேன். இதற்­கான மக்கள் எனக்கு ஆணை வழங்­க­வேண்டும். இது­வரை காலம் இலங்­கைக்கு கிடைக்­க­பெ­றாத அள­விற்கு சர்­வ­தேச முத­லீ­டு­களை கிடைக்க வழிச்­செய்வேன்.

ஐந்­தாண்டு நிறைவில் இலங்­கையை ஆடை உற்­பத்­திக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தாமல் கார் உள்­ளிட்ட வாக­னங்­க­ளையும் உற்­பத்தி செய்வோம். ஐந்து அம்ச வேலைத்­திட்­டங்­க­ளுடன் நாட்டை அபி­வி­ருத்தி செய்வோம்.

ஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சியை பின்­ந­கர்த்தி மீளவும் வௌ்ளை வேன் கலா­சா­ரத்தை மீளவும் ஏற்­ப­டுத்­து­வதா அல்­லது ஆகஸ்ட 17 ஆம் திகதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்தி அபி­வி­ருத்­தி­யு­டனும் சிறந்த பொரு­ளா­தா­ரத்­துடன் கூடிய புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வதா என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்­டும

வாக்­கு­று­தி­க­ளுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட சிந்­த­னைகள் அன்றி 60 மாதங்­களில் புதிய இலங்கையை உருவாக்கும் ஐந்து அம்ச திட்டத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இந்த திட்டத்தை வெற்றிப்பெற செய்யவேண்டும்

ஜனவரி 8 ஆம் திகதி கிடைக்க பெற்ற மக்கள் ஆணையை கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்தியதனை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை அபிவிருத்தி செய்யும் நாம் நிறைவேற்றுவோம் . இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை நாம் ஏற்படுத்துவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.