மைத்திரியின் உரைக்குத் தடைவிதித்தார் மகிந்த
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்தை, இலத்திரனியல் ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடைவி தித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களை அரச தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருவதாகவும், அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் அநீதியாக இருப்பதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்று தேர்தல் ஆணையாளரை சந்தித்து முறையிட்டிருந்தனர்.
இதையடுத்தே, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, மைத்திரிபால சிறிசேனவின் உரையை திரும்பத் திரும்ப ஒளிபரப்பக் கூடாது என்று இலத்திரனியல் ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலின் போது, எந்தவொரு வேட்பாளரையோ, அரசியல் கட்சியையோ ஊக்குவிக்கும் வகையில், இன்னொரு கட்சியை சாடும் வகையில் வெளியிடப்பட்ட எந்தவொரு உரை அல்லது அறிக்கை திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது அல்லது ஒலிபரப்புவது சட்டவிரோதமானது என்றும் இலங்கை தேர்தல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.