Breaking News

பிர­த­ம­ராக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ள நிலையில் மஹிந்­த­வினால் வெற்­றி­பெற முடி­யுமா?

மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக்­கு­வ­தில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். குரு­நா­கலில் போட்­டியி­ டு­ப­வர்கள் எவரும் அவ­ருக்கு ஆத ­ரவு வழங்கத் தயா­ரா­கவும் இல்லை. 

அவ்­வா­றா யின் மஹிந்த எவ்­வாறு வெற்றி பெறு­வது? கட்­சியின் தலைவர் மஹிந்தவை பிரதமராக்கமாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில் மஹிந்த எப்­படி தேர்தலில் வெற்றிபெறப்­போ­கின்றார்? என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார்.

நாங்கள் புதிய பாதையை நோக்கிப் பய­ணிக்­கின்றோம். புதிய சமூ­கத்தை கட்டி எழுப்­பு­வ­தற்குப் புறப்­பட்­டுள்ளோம். நாட்டை முன்­னேற்­றி பொது மக்­க­ளு­டைய கையில் பணபுழக்­கத்தை ஏற்­ப­டுத்­தி ஊழலை ஒழித்து நல்­லாட்­சியை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­ல­வுள்ளோம். இதற்­காக ஐக்­கிய தேசிய கட்­சியை வெற்­றி­பெறச் செய்­யுங்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

குரு­ணாகல் மாவட்­டத்தில் மாவத்­த­கம தேர்தல் தொகு­தியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மாவத்­த­கம சாமோ­தய விளை­யாட்டு மைதா­னத்தில் இந்த கூட்டம் நடை­பெற்­றது.

அவர் தொடர்ந்து பேசு­கையில்,

நாங்கள் எல்­லோரும் சேர்ந்து ஜன­வரி எட்டாம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை தோற்­க­டித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்­றி­பெறச் செய்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தினோம். உலகம் ஆச்­ச­ரி­யப்­ப­டு­ம­ள­வுக்கு உலக சம்­பி­ர தாய முறை­க­ளையும் உடைத்து இலங்கை சம்­பி­ர­தாய முறை­க­ளை யும் மீறி குரு­ணா­கலுக்கு மஹிந்த ராஜ­பக் ஷ தேர்­தலில் போட்டி போட வந்­துள்ளார்.

ஜன­வரி எட்டாம் திகதி தோல்­வி­யுற்­றதைப் போல் மீண்டும் தோல்­வி­யடைபய் போகின்றார். அவ­ருக்கு தற்­போது வாக்­குகள் இல்லை. அவர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் இல்லை. அவ­ருக்கு தலை­மைத்­துவம் வழங்க வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் கையி­லுள்­ளது. அவர் கட்­சியின் தலைவர். அவரை பிர­த­ம­ராக்­கு­வ­தில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். குரு ணா­கலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் எவ ரும் அவ­ருக்கு ஆத­ரவு வழங்கத் தயார் இல்லை. அவ்­வா­றாயின் அவர் எவ்­வாறு வெற்றி பெறு­வது? கட்­சியின் தலைவர் பிர­தமர் ஆக்­க­மாட்டேன் எனக் கூறினால் அவர் எப்­படி தேர்லில் வெற்றி பெறப்­போ­கின்றார்?

மஹிந்த ராஜ­பக் ஷ தலைகீழாய் நின்றாலும் இந்தப் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெல்ல முடி­யாது. ஜன­வரி எட்டாம் திக­தியை விட குறைந்­த­ளவு தான் கிடைக்கப் போகி­றது. எதற்கு வாக்­கு­களை வீண் விரயம் செய்ய வேண்டும். மக்­க­ளுக்கு தேவை­யாக மக்­க­ளு­டைய எதிர்­கா­லமே உள்­ளது.

இந்த நாடு உங்­க­ளு­டைய நாடாகும் என நினைத்துக் கொள்­ளுங்கள். அன்று வாக்­க­ளித்­த­வர்கள் கூட இனிமேல் மஹிந்­த­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்கள். எரி­பொ­ருள்­களின் விலையைக் குறைக்க முடி­யாது என்று அன்று கூறி­னார்கள். நாங்கள் எரி­பொ­ருள்­களின் விலை­களைக் குறைத்தோம். அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்கு சம்­பள உயர்வு அதி­க­ரிப்போம் எனக் கூறினோம். அவர்­க­ளு­டைய சம்­ப­ளத்­தையும் அதி­க­ரித்தோம். 

இதுபோல் எங்­க­ளு­டைய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இதனை உணர்ந்த மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு தயா­ரா­கிக விட்­டார்கள். நாங்கள் 100 நாள் வேலைத் திட்­டத்தின் கீழ் ஆறு மாதங்­களில் இவ்­வ­ளவு அளப்­ப­ரிய சேவை­களை எங்­களால் செய்ய முடியும் எனில் நாங்கள் வெற்­றி­பெறும் பட்­சத்தில் எத்­த­னையோ அபி­விருத்தி வேலை­களைச் செய்ய முடியும்.

பாட­சாலை விட்டு வெளி­யேறும் அவர்­க­ளுக்கு தொழில் அவ­சி­ய­மாகும். 10 இலட்சம் பேர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கத் திட்­ட­மிட்­டுள்ளோம். 5 ஆண்­டு­களில் இதனை நடை­மு­றைப்­ப­டுத்திக் காட்­டுவோம்.

இதனை இலங்­கை­யினால் மட்டும் தனியே செய்ய முடி­யாது. வெளிநாட்­ட­வர்­களின் உதவி தேவை, அந்த நாட்­ட­வர்­க­ளு­டைய அனைத்து வகை­யி­லான மூல வளங்­களும் கொண்டு நமது இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த வகை­யி­லேயே கணி­ச­மா­னளவு எமது நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வழங்க திட்­ட­மிட்­டுள்ளோம்.

100 நாள் வேலைத் திட்­டத்தின் கீழ் குளி­யாப்­பிட்­டி­யவில் கார் உற்­பத்தி கைத்­தொழில் நிலை­யத்தை அமைத்து கார்கள் உற்­பத்தி செய்­வ­தற்­கான வேலைகள் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

சீன நிறு­வனம் வந்து மீண்டும் அம்­பாந்­தோட்­டை­யி­லுள்ள துறை­மு­கத்தை மீளத் திருத்­தி­ய­மைத்து செயற்­ப­டுத்­து­வத்­கான வேலைகள் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வருகின்றன. எமது நாடு நான்கு ஐந்து ஆண்டுகள் செல்லும் போது எமது நாட்டிலிருந்து ஆடைகளை விட கார் உற்பத்தி, ஏற்றுமதி அதி கரிக்கப்பட்டிருக்கும்.

கல்வியிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகின்றோம். க.பொ. த.சாதாண தரத்தில் சித்தியடைய வில்லை என்றால் படிப்பை இடை நடுவில் விடத் தேவையில்லை. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவுள் ளோம். விளையாட்டுத்துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என் றார்.