மகிந்தவின் மீள் வருகை மக்களின் நன்மைக்காக அல்ல : அனுரகுமார
மகிந்தவின் மீள் வருகை இலங்கை மக்களின் நன்மை கருதி அல்ல தனது குடும்பத்தின் இருப்பிற்காகவும்,குடும்பத்தை சூழந்திருக்கும் கும்பலின் இருப்பிற்காகவும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10.45 மணியளவில் பண்டியன்தாழ்வில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தேசிய அரசு உருவாவதற்கு எந்த சாத்தியப்பாடும் இல்லை.ஏனென்றால் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக் கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பார்.அதேபோல ரணில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக் கொண்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பார்.
இதுவே இரண்டு கட்சிகளின் செயற்பாடும் போக்குகளும் இதுவாகும். எனவே விலைபோகாத நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்து நிலையான அரசை உருவாக்க வேண்டும் அதற்காக மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.