Breaking News

ஐ.பி.எல் சாதனையை சமன் செய்தார் பிரன்டென் மெக்கல்லம்

ஐ.பி.எல் தொடரில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய பிரண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158* ரன்களை குவித்து சாதனை படைத்தார். தற்போது அதை விட குறைவாக 64 பந்துகளில் 158* ரன்கள் குவித்து தனது முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார்.

நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் வார்விக்ஷையர்- டெர்பைஷையர் அணிகள் மோதின. இதில் வார்விக்ஷையர் அணிக்காக விளையாடிய நியூசிலாந்தின் பிரன்டென் மெக்கல்லம் 64 பந்துகளில் 158* ரன்களை அடித்தார். இதில் 11 சிக்சர்களும் 13 பவுண்டரிகளும் அடங்கும். 42 பந்துகளில் மெக்கல்லம் சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

வார்விக்ஷையர் அணி 20 ஓவர்களில் 242 ரன்களை குவித்தது. அடுத்து விளையாடிய டெர்பைஷையர் அணி, 182 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதால், வார்விக்ஷையர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.