மைத்திரியும் மஹிந்தவும் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர் : ஜே.வி.பி குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டதன் மூலம் அதிகார பேராசை அரசியல், இழிநிலை அரசியல் கலாச்சாரம் மீளவும் ஒன்றிணைந்து செயற்படுவது புலனாகியுள்ளது என ஜே.வி.பி.யின் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமது வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். மகிந்த ராஜபக்ச 5.8 மில்லியன் வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6.2 மில்லியன் வாக்காளர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தையும் பதவிகளையும் தக்க வைத்துக்கொள்வதில் அதிக சிரத்தைக் காட்டி வருகின்றார். மறு புறத்தில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த மைத்திரியுடன் இணைந்து கொண்டுள்ளது. மேலும், மைத்திரி-மகிந்த ஒற்றுமை தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையிலானதே தவிர, நாட்டு மக்களினதோ அல்லது வாக்காளர்களினதோ நன்மைக்காக அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.