புலிகளின் 767 வாகனங்கள் இராணுவத்திடம்
இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 767 வாகனங்கள் இராணுவ உடமையாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இராணுவம் பயன்படுத்திய புலிகளின் வெள்ளை நிற வேன் ஒன்று போலி இலக் கத் தகட்டுடன் கையகப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 767 வாகனங்களும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் காலத்தில் இராணுவத்துக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு இராணுவ இலக்கத் தகட்டுடன் பயன்படுத்துவதற்கான அனுமதியும் வழ ங்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி இரவு மிரிஹான தலைமை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் வெள்ளை நிற வேன் ஒன்றை இராணுவ வீரர்கள் ஆயுதத்துடன் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வேனானது புலிகள் அமைப்பினர் பயன்படுத்தியது எனவும் பின்னர் அது இராணுவத்துக்கு சொந்தமாக்கப்பட்டு மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க, உடனடியாக இரானுவத்திடம் சிறப்பு அறிக்கை ஒன்றினை கோரியிருந்த நிலையில் அதில் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவத்துக்கு சொந்தமாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வாகனங்களைப் பட்டியல் இடுமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையிலேயே புலிகளுக்கு சொந்தமான 767 வாகனங்கள் இராணுவத்திடம் தற்போது உள்ளமை தெரியவந்துள்ளது. இதில் வெள்ளை வேன்கள் உள்ளிட்ட பல ரகங்களைச் சேர்ந்த வாகனங்களும் அடங்கின்றன. இது தொடர்பிலான தகவலை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரஜித்த சேனாரத்னவும் உறுதி செய்துள்ளார்.