Breaking News

75 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிந்தது! ஒன்றாகவே உயிரிழந்த தம்பதியினர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், 75 ஆண்டுகாலமாக திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்த தம்பதியினர் ஒன்றாகவே கைகோர்த்த வண்ணம் படுக்கையில் உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் மிகவும் வயதுஅதிகமான தம்பதியினர் ஜேனெட் (வயது 96), அவரது கணவர் அலெக்சாண்டர் (வயது 95) உயிரிழந்தனர். இருவரும் கடந்த 1940-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டவர்கள். அவர்கள் தங்களது 5 குழந்தைகளுடன் கலிபோர்னியாவின் சான் டிஜ்கோவில் வசித்துவந்தனர். 75 ஆண்டுகள் தங்களது வாழ்க்கையை ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்த அவர்கள், இறப்பிலும் பிரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து உள்ளனர். 

அலெக்சாண்டர் உடல் நலகுறைபாடு காரணமாக வாடிவந்து உள்ளார். ஜேனெட்டிற்கும் உடல்நல குறைபாடு இருந்து உள்ளது. அவர்கள் படுக்கையிலே தொடர்ந்து இருந்து வந்துஉள்ளனர்.

நாங்கள் இருவரும் கைகளை கோர்த்த வண்ணம் உயிரிழக்க வேண்டும் என்ற தங்களது இறுதி ஆசையை தனது குழந்தைகளிடம் தெரிவித்து உள்ளானர். அதன்படியே இறுதியில் அவர்கள் உயிரிழந்தனர். இருவரும் 8-வயதில் இருந்தே மிகவும் அன்பாக இருந்துஉள்ளனர். 

இருவர் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்து வந்து உள்ளனர். இறப்பிலும் பிரியாத வண்ணம் ஒன்றாக உயிரை விட்டுவிட்டனர். இந்த தம்பதியினருக்கு 10 பேர குழந்தைகள் உள்ளது. அவரது பேர குழந்தைகளுக்கும் 6 குழந்தைகள் உள்ளது. தங்களது தாத்தா - பாட்டி இறந்ததில் அவர்கள் பெரிதும் வருத்தத்தில் உள்ளனர்.