பெருந்தலைவன் பிரபாகரன், பச்சோந்தி வித்தி : சிறிதரன் அதிரடி
பிரபாகரன் என்ற பெருந்தலைவனுக்கு கீழ் இருந்தவர்கள் இன்னொரு பச்சோந்தியைத் தலைவராக கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வித்தியாதரனின் ஜனநாயகப் போராளிகள் கட்சி குறித்து கருத்து வெளியிட்ட சிறிதரன், அரசாங்கத்துடன் இணைந்திருக்கிற தங்களுடைய சுயநலங்களுக்காக புறப்பட்டிருக்கும் சிலர் போராளிகளை மிக மோசமாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறார்கள்.
பிரபாகரன் என்ற பெருந்தலைவனுக்கு கீழ் இருந்தவர்களுக்கு இன்னொரு பச்சோந்தியைத் தலைவராக கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைப் புலிகள் அரசியலில் ஈடுபடும் சுதந்திரம் இருக்குமாயின் அவர்களுக்குரிய தலைமையை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க குறிப்பிட்ட சிலர் பதவியை அடைவதற்காக போராளிகளைப் பயன்படுத்துகிறார்கள், பயன்படுத்தப்பார்க்கிறார்கள் என்றார்.