Breaking News

அமெரிக்காவில் உலக வங்கி அதிகாரிகளைச் சந்தித்த விக்னேஸ்வரன் – கொழும்பில் சர்ச்சை

அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன், அங்கு உலக வங்கி அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கூட்டம் தொடர்பான விபரங்கள் ஏதும் கிடைக்காத போதிலும், முதலமைச்சர் ஒருவர் அனைத்துலக முகவர் அமைப்பு ஒன்றுடன் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளது குறித்து கொழும்பில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்த போது, அவரது செயலகத்தினால் உலக வங்கியுடனான சந்திப்புக்கு அனுமதி கோரப்பட்டதாக, கொழும்பில் உள்ள உலக வங்கியின் பணியகம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில், சந்திப்புகளுக்கான கோரிக்கைகள் விடுக்கப்படும் போது, எப்போதுமே அதற்குச் சாதகமாக பதிலளிக்கப்படும்.

உலக வங்கியின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் தற்போது வொசிங்டனில் இருக்கிறார். அவரும், பிராந்திய உதவித் தலைவரும் முதலமைச்சரைச் சந்தித்திருக்கலாம்.” என்றும் கொழும்பில் உள்ள உலக வங்கியின் பணியகம் தெரிவித்துள்ளது. சந்திப்புக்கான நோக்கம் அல்லது காரணங்களை அவர்கள் வெளியிடவில்லை