Breaking News

ஐ.ம.சு.முன்னணியில் மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்க முடிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கையொப்பமிட்டு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.