Breaking News

மஹிந்தவை இணைத்ததன் மூலம் கட்சிக்கு பெரும் பலம்! ரணிலை தோற்கடிப்போம் என்கிறார் நிமல்

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் மஹிந்த ராஜபக்ஷவை இணைத்துக்­கொண்­டமை கட்­சியை பலப்­ப­டுத்தும் செயற்­பா­டா கும். ஆனால் பிர­தமர் வேட்­பா­ள­ராக மஹிந்த ராஜபக் ஷவை நிய­மிப்­பது தொடர்பில் இன்­னமும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என்று எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ரணிலை தன்னால் வீழ்த்த முடி யும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின்

தேர்தல் நட­வ­டிக்­கைகள் மற்றும் பிர­தமர் வேட்­பாளர் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியை ஒன்­றி­ணைத்து மீண்டும் பல­மான ஆட்­சியை அமைக்க வேண்டும் என்­பதே எம் அனை­வ­ரி­னைதும் எதிர்­பார்ப்­பாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைத்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தும் நோக்­கத்தில் தான் கடந்த காலங்­களில் நாம் போரா­டினோம்.

இந்த போராட்­டத்தில் மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் இணைத்­துக்­கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கட்­சிக்குள் அனை­வ­ருக்கும் இருந்­தது. அதை தடுக்க ஒரு­சில புறக் கார­ணி­களும், சர்­வ­தேச மற்றும் பிரி­வி­னை­வாத சக்­திகள் செயற்­பட்­டன. ஆனால் இன்று அவற்றை வெற்றி கொண்டு கட்­சியை பலப்­ப­டு­தி­விட்டோம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் எம்­முடன் கைகோர்த்­தமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.

மேலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் வேட்­பாளர் பட்­டி­யலில் மஹிந்த ராஜபக் ஷவும் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்ளார். ஆனால் கட்­சியின் பிர­தமர் வேட்­பாளர் யார் என்­பது இன்னும் தீர்­மா­னிக்கப் பட­வில்லை. மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக்க வேண்டும் என ஒரு சிலர் தமது தனிப்­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர்.

என்னை பிர­தமர் வேட்­பாளர் ஆக்கக் கோரியும் சில பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு இன்னும் சில முக்­கிய உறுப்­பி­னர்­களின் பெயர்­களும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இதில் இறுதி முடிவை கட்­சியின் தலை­வரும் கட்­சியின் மத்­திய குழு­வுமே தீர்­மா­னிக்கும். கட்­சியின் இறுதி முடிவு எவ்­வாறு அமை­யுமோ அதற்கு கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­களும் கட்­டுப்­பட வேண்டும் என்­பதில் நாம் முரண்­ப­ட­மாட்டோம். அதேபோல் கட்­சியில் யாரை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிறுத்­தி­னாலும் எதிர்த்­த­ரப்பு வேட்­பாளர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு சவா­லா­கவே அமையும்.

என்னால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தோற்­க­டிக்க முடியும். நாம் கட்­சி­யாக ஒன்­று­பட்டால் ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்­துவோம் என்­பதை மறந்­து­வி­ட­வேண்டாம். மஹிந்த மட்­டு­மல்ல என்னை நிறுத்­தி­னாலும் ரணி­லுக்கு நெருக்­க­டி­யா­கவே அமையும்.

நாம் எப்­ப­டி­யேனும் இம்­முறை தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்­சியை கைப்­பற்­றுவோம். அதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அதேபோல் இனிமேல் தேசிய அர­சாங்கம் என்ற பேச்­சுக்கே இடம் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணி ஆட்­சி­யையே உரு­வாக்­குவோம். அதேபோல் தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு மீண்டும் ஜன­நா­யக ஆட்­சியை நாம் முன்­னெ­டுக்க வேண்டும். எமது ஆட்­சியில் நாட்டில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. வடக்­கிலும், கிழக்­கிலும் அமை­தி­யான சூழல் உரு­வாக்­கப்­பட்­டது.

ஆனால் கடந்த ஆறு­மாத காலத்தில் இவை அனைத்தும் மீண்டும் அழிக்­கப்­பட்­டுள்­ளன. வென்­றெ­டுத்த ஜனா­யகம் மீண்டும் பிரி­வி­னை­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்­காக தாரை­வாக்­கப்­பட்­டுள்­ளது. புலம்பெயர் புலிகளின் தேவைக்காக நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. ஆகவே இவை அனைத்தையும் தடுத்து மீண்டும் நாட்டை பாதுகாத்து வளமான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு இம்முறை தேர்தலை சாதகமாக நாம் பயன்படுத்திக் கொள்வோம் எனக் குறிப்பிட்டார்.