மகிந்தவின் தேர்தல் பிரவேசம்: கருத்து கூறமுடியாது என்கிறது ஐ.நா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளாந்த ஊடக அறிக்கையில் பொதுத்தேர்தலில் மகிந்தவின் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட முடியாது என ஹக் தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தேர்தலில் போட்டியிடவது குறித்து தங்காலையில் உள்ள அவரது வீட்டில் இருந்தவாறே அறிவித்தல் விடுத்திருந்தார்.
எனினும் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்ற குழப்பம் இருந்து வந்தது. எனினும் ஐ.ம.சு.முன்னணியிலேயே அவர் போட்டியிடுவார் என பொதுச் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.