பாதுகாப்பு அரணாக பாராளுமன்றை பயன்படுத்தவே மஹிந்த மீள்பிரவேசம்! கூட்டமைப்பு விசனம்
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு பாதுகாப்பு அரணாக பாராளுமன்றத்தைப் பயன்படுத்தவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மீண்டும் அரசியலில் பிரவேசிக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளமை தொடர்பில் மேற்கண்டவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1989ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சிக்காகவும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்துத் தரப்பும் ஒன்று திரண்டு வாக்களித்தமையினால் ஆட்சியிலிருந்து வெ ளியேற்றப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் அவர் மீதும் அவரு டைய பாரியார், சகோதரர்கள் புதல் வர்கள் மீதும் இலஞ்ச ஊழல் மோடி குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டிருந்தன. இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னை ஊழல் மோசடியற்ற நபர் என்பதை நிரூபிக்கவில்லை. அவ்வாறான நிலையிலேயே தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு பாராளுமன்றத்தை அரணாகப் பயன்படுத்தும் நோக்கத்துடனேயே மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளார்.
அரசியலில் பிரவேசிப்பது என்பது இலங்கையின் எந்தவொரு பிரஜைக்கும் இருக்கும் ஜனநாயக உரிமையாகும். அந்த வகையில் அவருக்கு ஜனநாயக உரிமை உள்ளது. ஆனால் தன்னை இலஞ்ச ஊழல் மோசடி அற்ற ஒரு நபராக நிரூபணம் செய்த பின்னரே அரசியலில் பிரவேசித்திருக்க வேண்டும்.
மேலும் இரண்டு தடவைகள் அதிஉச்ச பதவியான ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருந்த இவரை மக்கள் வெறுத்து ஒதுக்கியதன் காரணமாகவே ஆட்சியிலிருந்து அகற் றப்பட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டிருந்தார். மக்களால் தோற்கடிக் கப்பட்ட ஒருவர் அதனை உணர மறந்து மீண்டும் அரசியலில் பிரவே சிப்பது என்பது வேடிக்கைக்குரிய தாக இருக்கின்றது என்றார்.