Breaking News

முடிவுக்கு வந்தது கூட்டமைப்பின் ஆசன பங்கீடு - முடிவு வெளியானது

தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடகிழக்கு மாகாணங்களில் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தலை சந்திக்க தீர்மானி த்துள்ளதாகவும், கட்சிகளுக்கான ஆசன பங்கீடு சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய தினம் காலை 11 மணி தொடக்கம் மாலை 7 மணி வரையில் பேசியிருந்தோம். குறிப்பாக ஆசனப் பங்கீடு தொடர்பிலும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலும் பேசியிருத்தோம். ஆசனப் பங்கீடு சுமூகமான முறையில் முடிவுக்கு வந்திருக்கின்றது

மேலும் முன்னாள் போராளிகள் சிலர் இன்றைய கூட்டத்தில் ஆசன ஒதுக்கீடு கேட்டிருந்தார்கள். எனினும் அதனை பரிசீலிக்க இது நேரமில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இந்நிலையில் தாம் மக்களோடு பேசுவதாக கூறிச் சென்றுள்ளார்கள்.

இதன்படி,

யாழ்ப்பாணம்

தமிழரசுக்கட்சி – 6 
ஈபிஆர்எல்எவ் - 2 
புளொட் 1 
ரெலோ 1 

வன்னி

தமிழரசுக்கட்சி – 3 
ரெலோ 3 
ஈபிஆர்எல்எவ் - 2 
புளொட் - 1 

மட்டக்களப்பு

தமிழரசுக்கட்சி –5 
ஈபிஆர்எல்எவ் - 1 
புளொட் 1 
ரெலோ 1 

அம்பாறை

தமிழரசுக்கட்சி – 6 
ஈபிஆர்எல்எவ் - 2 
ரெலோ 1 
புளொட் 1 


திருகோணமலை

தமிழரசுக் கட்சி - 3 
ஈ.பி.ஆர்.எல்.எவ் - 1 
ரெலொ- 1

தொடர்புடைய செய்திகள் 

01.http://www.tamilkingdom.org/2015/07/78_30.html

02.http://www.tamilkingdom.org/2015/07/45_31.html