உள்ளகப் பொறிமுறை உருவாக்கம் குறித்து எந்தவித நடவடிக்கையுமில்லை!
உள்ளகப் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை
என்பதைச் சுட்டிக்காட்டி வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வெகுசன அமைப்புக்கள் கூட்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியின் கருத்திற்கும் அக்கடிதத்தில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் தமிழ் சிவில் சமூக அமையம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம், யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, மன்னார் பிரஜைகள் குழு, காணாமல் போனோரின் உறவினர் சங்கம், கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்களே ஒன்றிணைந்து மேற்கண்ட கருத்துக்களை உள்ளடக்கிய கடிதத்தை அனுப்பியுள்ளன.
அக்கடிதத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உள்ளகப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாயின் அது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்தே உருவாக்கப் பட வேண்டுமென கடந்த மார்ச் மாதம் 28ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரகைூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய போதும், கடந்த மாதம் 29ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய போதும் குறிப்பிட்டு ஆலோசனை வழங்கியிருந்தார். அவ்வாறன ஆலோசனை செயனன்முறையொன்று நடைபெற்று வருவதாக இலங்கை வௌிநாட்டமைச்சும் அண்மையில் தெரிவித்திருந்தமையை இக்கடிதத்தில் சுட்டிக்காட்ககாட்டியுள்ளன.
மேலும் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஜூன் 4 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் சம்பந்தமான முழுமையான கொள்கை வரையறை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தை உருவாக்கல் எனும் தலைப்பில் இடம்பெற்ற நிதி வழங்காளர் மாநாட்டில் உள்ளகப் பொறிமுறை ஒன்றிற்கு ஐ. நா நிதி வழங்கத் தயார் என்று கூறியிருந்தமைன்னு இக்கடிதத்தில் கண்டளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அறிக்கை வௌிவருவதற்கு முன்னதாகவே இவ்வாறான அறிவிப்புக்கள் தவறானவை. அவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிக்கையின் பெறுமதியைக் குறைக்கும் தன்மையானவை எனவும் சுட்டிக் காட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பு தொடர்பில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் கலந்தாலோசிக்கப்பட்டதா என்ற கேள்வியையும் இக் கடிதம் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.