Breaking News

முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை

முன்னாள் போரா­ளிகள் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தற்­போ­தைய அர­சியல் சூழ­மை­வு­களில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் என தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஊடகப் பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அவர்­க­ளுக்கு தோல்­வி­யொன்று ஏற்­ப­டு­மாயின் விடு­தலைப் புலி­க­ளுக்கு தமிழ் மக்கள் மத்­தியில் ஆத­ர­வில்லை என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்தி விடு­மெ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

முன்னாள் விடு­தலைப் புலிப் போரா­ளிகள் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்து இன்­றைய தினம் யாழ்.மாவட்­டத்தில் ஆரா­ய­வுள்­ளமை குறித்து வின­வி­ய­போதே முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­பொ­ழுது அர­சியல் கள­நி­ல­வ­ரங்­களைப் பார்க்­கின்­ற­போது இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட தரப்­பினர் மீண்டும் அர­சி­யலில் பிர­வே­சித்­துள்­ளனர். குறிப்­பாக தமி­ழீழ விடு­தலைப் புலி­களை முள்­ளி­வாய்க்­காலில் முற்­றாக அழித்து விட்­ட­தாக மார்­தட்டி கடந்த காலங்­களில் தமது அர­சியல் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள். அது­மட்­டு­மின்றி முன்னாள் விடு­தலைப் புலிப்­போ­ரா­ளி­களை புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­வ­தாக சர்­வ­தே­சத்­திற்கு ஒரு போலி­யான பிர­சா­ரத்தை காட்டிக் கொண்­ட­வர்கள் அவர்­க­ளுக்கு நட­மாடும் சுதந்­தி­ரத்­தையோ கருத்து வெளியிடும் சுதந்­தி­ரத்­தையோ வழங்­கி­யி­ருக்­க­வில்லை.

வடக்­கி­லி­ருந்து உயர் பாது­காப்பு வல­யங்கள் அகற்­றப்­ப­டா­மைக்கும் ஒரு இரா­ணுவ வீரர் கூட குறைக்­கப்­ப­டா­மைக்கும் விடு­தலைப் புலிகள் மீண்டும் தலை­தூக்கி விடு­வார்கள் என்றே காரணம் கூறி வந்­தனர். இவ்­வா­றான நிலையில் அதே­

அ­ணி­யினர் மீண்டும் அர­சியல் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்­க­வுள்­ளனர். இவ்­வா­றான தரு­ணத்தில் முன்னாள் விடு­தலைப் போரா­ளி­களைக் கொண்ட அணி­யொன்று பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது என்­பது இன­வா­தி­க­ளுக்கும் புலி­களை மைய­மாக வைத்து அர­சியல் செய்­ப­வர்­க­ளுக்கும் ஏது நிலை­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் என்றார்.