Breaking News

மஹிந்த இறுதி நேரத்தில் நிராகரிக்கப்படலாம் : கட்­சிக்குள் ­திட்­டங்கள்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை இறுதி நேரத்தில் நிரா­க­ரிக்கும் வேலைத்­திட்­டங்கள் கட்­சிக்குள் இடம்­பெ­றலாம். ஆனால், அதை எம்மால் அனு­மா­னிக்க முடி­யா­துள்­ளது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.


ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன கட்­சியை பிள­வு­ப­டுத்த அனு­ம­திக்க மாட் டார் என்ற நம்­பிக்கை இருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்புமனுவில் மஹிந்த கைச்­சாத்­திட்­டாலும் முடி­வுகள் இறுதி நேரத்தில் மாறலாம் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ள நிலையில் மஹிந்த ஆத­ரவு அணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பல­மான கட்­சி­யா­கவும் பிள­வு­ப­டாத கட்­சி­யா­கவும் இந்தத் தேர்­தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு எம்­மிடம் இருந்­தது.

அதேபோல் இம்­முறை பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியை வீழ்த்தி மீண்டும் மைத்­திரி- மஹிந்த தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணயின் ஆட்­சியை அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தில் தான் மஹிந்த ஆத­ரவுக் கூட்­ட­ணியை உரு­வாக்கி தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களை கொடுத்து வந்தோம். இவ்­வி­ரண்டு நோக்­கங்­களும் இன்று நிறை­வே­றி­யுள்­ளன.

கட்­சி­யையும் ஒன்­றி­னைத்து மஹிந்த ராஜபக் ஷவையம் தேர்தல் களத்தில் இறக்­கி­யுள்ளோம். இது எமக்குக் கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும். அதேபோல் ஜனா­தி­பதி எமது தீர்­மா­னத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை தேர்­தலில் கள­மி­றக்கி கட்­சிய வெற்றிப் பாதையில் கொண்­டு­செல்ல வேண்டும் என்ற முடிவில் அவர் உள்ளார்.

ஆனால் கட்­சிக்குள் ஒரு­சிலர் தமது இருப்பை தக்­க­வைத்துக் கொள்ளும் நோக்­கத்தில் மஹிந்­தவின் மீள் பிர­வே­சத்தை தடுக்க நினைக்­கின்­றனர். அதற்­கான பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். ஆனால் ஏன் இவர்­கள் இவ்­வாறு நடக்­கின்­றனர் என்­பது எமக்கு தெரி­ய­வில்லை.

முன்­னைய ஆட்­சியின் போது இவர்­க­ளுக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முக்­கிய இடம் கொடுத்து வைத்­தி­ருந்தார். இவர்­களே கடந்த ஆட்­சியில் முக்­கிய நபர்­க­ளாக செயற்­பட்­டனர். பல தீர்­மா­னங்கள் இவர்­களின் அனு­ம­தி­யுடன் தான் மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கொண்டார். அவ்­வாறு இருக்­கையில் ஏன் இப்­போது இவ்­வாறு நடக்­கின்­றனர் என்­பது எமக்கு தெரி­ய­வில்லை. அனு­மா­னிக்­கவும் கடி­ன­மா­கவே உள்­ளது.

அதேபோல் இறுதி நேரத்தில் மஹிந்­தவை நிரா­க­ரிக்கும் கதை­களை இவர்கள் கூறு­கின்­றனர். இதற்கும் என்னால் தெளி­வான பதிலை குறிப்­பிட முடி­யாது. கட்­சியில் மஹிந்த போட்­டி­யி­டுவர் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் வேட்­பு­ம­னு­விலும் அவர் கைச்­சாத்­திட்­டுள்ளார்.

ஆகவே இவை அனைத்தும் ஜனா­தி­ப­தியின் அனு­ம­தி­யுடன் தான் நடை­பெற்­றன. இந்த நிலையில் மஹிந்­தவை மீண்டும் நிரா­க­ரிக்க ஏதேனும் திட்டம் இருக்­குமா என்­பதை எம்மால் அனு­மா­னிக்க முடி­யாது. எனினும் அவ்­வாறு ஏதேனும் இருக்­கு­மாக இருந்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாகிவிடும் என்பதையும் ஜனாதிபதி தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்சியை ஒன்றிணைத்து பலமான கட்சியாக களமிறங்குவது என்பதே எம் அனைவரினதும் தீர்மானமாகும். அதை யாரும் சீரழிக்க ஜனாதிபதி இடமளிக்க மாட்டார் எனக் குறிப்பிட்டார்.