Breaking News

மீனா பாபநாசம் படத்தை பார்த்து கமல், கவுதமியை பாராட்டினார்!


மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் மோகன்லால் கேரக்டரில் கமலும், மீனா வேடத்தில் கவுதமியும் நடித்துள்ளனர். இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கு மீனாவையே நடிக்க வைத்தனர். ஆனால் தமிழில் வாய்ப்பு கிட்டவில்லை.

கவுதமியை நடிக்க வைத்து விட்டனர். பாபநாசம் படம் மீனாவுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படம் அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. கமலையும், கவுதமியையும் பாராட்டினார்!