Breaking News

புலிகள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் - முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்ள அதேவேளை, விடு­தலைப் புலிகள் அமைப்பு மீண் டும் தலை­தூக்கும் அபாயம் ஏற்பட் ­டுள்­ள­தாக முன்­னாள்­ அ­மைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் காரியா­ல ­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இத னைத் தெரி­வித்தார். பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தொட ர்ந்து உரை­யாற்­று­கையில்,

இன்று நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. இதனை புலம் பெயர்ந்து வாழும் தமி­ழர்­களும், விடு­த­லைப்­பு­லி­களும், நாட்டில் உள்ள சில தீய சக்­ச­தி­களும் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். யுத்தம் நிறை­வ­டைந்­த­மை­யினால் விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் அழிந்து விட்­ட­தாக எண்­ணக்­கூ­டாது. அவ்­வ­மைப்பு சாம்­பலால் மூடப்­பட்­டுள்ள தணல் போல் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.. அவ்­வ­மைப்­புக்கு சர்­வ­தேச ரீதியில் பாரி­ய­ளவில் நிதி சேக­ரிக்­கப்­ப­டு­கி­றது. அதற்­கான தெளி­வான ஆதாரம் உள்­ளது.

அண்­மையில் தமிழ் நாடு இரா­ம­நா­த­புரம் பிர­தே­சத்தில் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்பு பட்­டி­ருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்டும் நான்கு பேர் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளிடம் 75 சைனைட் குப்­பிகள், இலங்கை நாண­யத்­தாள்கள், இலங்கை சாரதி அனு­ம­திப்­பத்­திரம் என்­பன கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இது பார­தூ­ர­மான விட­ய­மாகும். யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் சைனைட் குப்­பிகள் வெளி­வரும் சந்­தர்ப்பம் இது­வாகும். சைனைட் குப்­பிகள் விடு­த­லைப்­பு­ரி­க­ளுக்கே உரித்­தான ஒரு சாத­ன­மாகும்.

வடக்கு முத­ல­மைச்­சரும் அவ­ரது அணி­யி­னரும் வடக்­கி­லி­ருந்து இரா­ணுவ முகாம்­க­ளையும் இரா­ணு­வத்­தையும் வெளி­யேற்­று­மாறு வேண்­டு­கின்­றனர். இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். இரா­ணு­வத்­தினர் போதைப்­பொருள் வியா­பாரம் செய்­வ­தாக குற்றம் சாட்­டு­கின்­றனர். அநு­ரா­த­புரம் சிறையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள விடு­த­லைப்­பு­லிகள் சந்­தே­க­ந­பர்­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு அமைச்சர் ஒருவர் அர­சாங்­கத்­தக்கு அழுத்தம் கொடுக்­கிறார்.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் நாம் பெற்ற வெற்­றியை கேள்­விக்­கு­றி­யாக்­கி­விடும். எமது ஆட்­சி­யின்­போது வடக்கில் அமைதி நில­வி­யது. இன்று வடக்கின் நிலை­வரம் மோச­மாகக் காணப்­ப­டு­கி­றது.

மேலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்­புகள் இலங்­கை­யி­லுள்ள அர­சியல் தலை­மை­க­ளுக்கும் , இரா­ணு­வத்­திற்­கெ­தி­ரா­கவும் பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க பாரி­ய­ள­வி­லான பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்­டுள்­ளனர். அவ்­வ­மைப்­புகள் சர்­வ­தேச ரீதியில் எமது நாட்­டுக்கு எதி­ராக செய்ய முடி­யு­மான சக­ல­தையும் செய்­து­கொண்­டி­ருக்­கின்­றன. வெளி­நா­டு­க­ளுடன் நல்ல உறவைப் பேண வேண்­டி­யது அவ­சி­யம்தான். ஆனாலும் எமது நாட்டின் இறை­மைக்கு பாதகம் ஏற்­படும் வகையில் அந்த உறவு அமைந்து விடக்­கூ­டாது.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­யா­க­வுள்­ளது. அந்த அறிக்கை வெளி­யா­வ­தற்கு முன்­ன­தா­கவே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­ப­டு­கி­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கு ஜெனிவா அறிக்கை வெளி­யா­வ­தற்கு முன்னர் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தேவை­யுள்­ளது. அத­னா­லேயே எதிர்­வரும் 17 ஆம் திகதி தேர்­தலை நடத்­து­கின்­றனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஆட்­சி­யின்­போது பயங்­க­ர­வாத அமைப்­பு­களின் தோற்றம் பற்­றிய சந்தேகம் ஏற்பட்டவுடன் அதற்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லாது போயுள்ளது. ஆகையினால் புலம்பெயர் அமைப்புகள் எவ்வித அச்சமுமின்றி சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கெதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவைப்போன்ற நாட்டையும் இராணுவத்தையும் பாதுகாக்கக்கூடிய தலைமையே இன்று நாட்டுக்குத் தேவையாகவுள்ளது எனவும் குறிப்பிட்டார்.