Breaking News

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது.ஜாவா தீவில் இருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று இந்தோனேசிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிலநடுக்கம் கடல்பகுதியில் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை.