Breaking News

மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்,முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவர் : சோபித தேரர்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் பழி­வாங்­கப்­ப­டு­வார்கள். 




பழி­வாங்கும் நோக்­கத்தில் தான் மஹிந்த, கூட்­டணி அமைக்­கின்றார் என்று கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் அமைப்­பா­ள­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை காப்­பாற்­று­வ­தாக ஜனா­தி­பதி எனக்கு செய்­து­கொ­டுத்த வாக்­கு­று­தியை மறந்­து­விடக்கூடாது எனவும் அவர் குறிப்­பிட்டார். அர­சி­யலில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் குழப்­ப­நிலை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் கடந்த ஆறு மாதங்­களில் நாட்டில் பல நல்ல மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. மக்கள் எவ்­வித அச்­சமும் இன்றி வாழ ஆரம்­பித்­துள்­ளனர். ஊட­கங்கள் சுயா­தீ­ன­மாக இயங்க ஆரம்­பித்­துள்­ளன. மதக் கல­வ­ரங்­களோ அல்­லது இன முரண்­பா­டு­களோ இந்த ஆறு மத காலத்தில் பதி­வா­கி­ய­தாக நான் அறி­ய­வில்லை.

மக்கள் மிக நீண்ட நாட்­களின் பின்னர் அமை­தி­யாக வாழ்ந்து வரும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இவ்­வா­றான நிலையில் அதி­கார ஆசையை காரணம் காட்டி மீண்டும் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­விட வேண்டாம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்­டணி தமது சுக­போக வாழ்க்­கை­யினை வாழ்­வ­தற்­காக நாட்டு மக்­களை அடி­மை­க­ளாக நடத்­தினர். மத­வா­தத்­தையும், இன முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­வித்­தனர்.

கடந்த முப்­பது வரு­டங்­க­ளாக இந்த நாடு எவ்­வா­றான சூழ்­நி­லைக்கு முகம்­கொ­டுக்க வேண்டி ஏற்­பட்­டதோ அதே நிலைமை கடந்த ஐந்து ஆண்­டு­க­ளிலும் நில­வி­யது. வெறு­மனே போர் வெற்­றியை மாத்­திரம் வைத்து சிங்­கள இன வாக்­கு­களில் வாழலாம் என மஹிந்த நினைத்தன் கார­ணத்­தினால் தான் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் தோல்­வியை சந்­தித்தார்.

இந்த ஆறு­மாத காலத்தில் யாரு­டைய தனிப்­பட தேவைக்­கா­கவும் ஆட்சி நடை­பெ­ற­வில்லை. முழு­மை­யாக மக்­களை இலக்கு வைத்தே ஆட்சி நடந்­துள்­ளது. இந்­நி­லையில் மீண்டும் சர்­வா­தி­கார ஆட்­சிக்­கான முயற்­சி­களை உட­ன­டி­யாக தடுத்து மக்கள் ஆட்­சியை பலப்­ப­டுத்த வேண்டும். கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் அரச தரப்­பினர் மற்றும் ஏனைய கட்சி தலை­வர்கள் என்னை சந்­தித்து பேச்­சு­வார்த்தி நடத்­தினர். இதன்­போது எக்­கா­ர­ணத்தை கொண்டும் நாட்டில் மீண்டும் சர்­வ­தி­கார தலை­மைத்­து­வத்தை உரு­வாக்க துணை நிக்கப் போவ­தில்லை என எனக்கு வாக்குக் கொடுத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் எனக்கு கொடுத்த வாக்­கு­று­தி­யினை மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­யாக நம்­பு­கின்றேன். எனவே மஹிந்­தவின் பின்னால் ஒரு­சிலர் செயற்­ப­டுகின்றனர். மஹிந்­தவை மீண்டும் ஆட்­சிக்கு கொண்­டு­வந்து அவர் மூலம் தமக்­கான சுக­போக வாழ்க்­கை­யினை அடைய நினைக்கும் எவ­ருக்கும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் அர­சி­யலில் இடம் கொடுக்கக் கூடாது.

அதேபோல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் வாய்ப்பு வழங்கக் கூடாது. இதை ஜனா­தி­பதி மக்­க­ளுக்­காக செய்ய வேண்டும். மஹிந்த மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வந்தால் மீண்டும் கட்­சியின் உறுப்­பி­னர்­களை மட்டும் அல்­லாது தன்னை தோற்­க­டித்த மக்­க­ளையும் சேர்த்தே பழிவாங்குவார். இதனால் அதிகளவில் தமிழ், முஸ்லிம் மக்களே பாதிக்கப்படுவார்கள். இப்போது மஹிந்த உருவாக்கும் கூட்டணியும் முழுமையாக பழிவாங்கல் அரசியலை செய்யவே முயற்சிக்கின்றது. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.