Breaking News

கிழக்கை அபி­வி­ருத்தி செய்­யும்­வரை தேர்தலில் இறங்கப் போவ­தில்லை! - கிழக்கு முத­ல­மைச்சர்

கிழக்கை அபி­வி­ருத்தி செய்­யும்­வரை தேர்­தலில் இறங்­கப்­போ­வ­தில்லை என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். 




முத­ல­மைச்சர் நஸீர் அஹ­ம­திடம் பொதுத்­தேர்தல் பற்றி கேட்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,

கிழக்கில் தேங்கிக் கிடக்கும் பாரிய அபி­வி­ருத்­தி­க­ளான வேலை­யற்ற இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வெளிநா­டு­க­ளுக்கு செல்லும் பணிப்­பெண்­களைத் தடுத்து அவர்­களை சுய­தொழில் முயற்சிக்கு ஊக்­கு­வித்தல் போன்­ற­வற்­றுடன் கிழக்கில் செய்­யப்­ப­ட­வி­ருக்­கின்ற பாரிய அபி­வி­ருத்திப் பணி­களை என் ஆட்­சியில் செய்து முடிக்­கும்­வரை தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தில்லை.

பொதுத் தேர்­தலில் என்னைக் கள­மி­றங்­கு­மாறு என் நண்­பர்­களும், ஆத­ர­வா­ளர்­களும் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தனர். கிழக்கு மாகாண மக்­களின் கோரிக்கை கரு­தியும், இங்­குள்ள அபி­வி­ருத்தி கரு­தியும் நான் போட்­டி­யி­டு­வதில் இருந்து பின்­வாங்­கினேன். ஆனால் இத்­தேர்­த­லா­னது நல்­லாட்­சியின் பார்­வையில் முக்­கியம் வாய்ந்த தேர்­த­லாகும். ஒவ்­வொரு பொது­ம­கனும் சிறந்த முறையில் சிந்­தித்து தங்­களின் வாக்­கு­ரி­மை­களைப் பாவிக்க வேண்டும்.

மீண்டும் இந்த நாட்டில் கடந்த கால நிலைமைகள் தலை­தூக்க விடாமல் நாசம­டைந்­தி­ருக்கும் நல்­லாட்­சியை மேலும் மெரு­கூட்டி நாட்டில், வீட்டில் ஒவ்­வொரு பொது­ம­கனும் சந்­தோ­ஷ­மாக தங்கள் குடும்­பங்­க­ளுடன் வாழ­வேண்டும். அந்த நிலைமை என்றும் இந்­நாட்டில் இருக்­க­வேண்டும். இன­மத வேறு­பா­டு­க­ளற்ற ஆட்சி சிறப்­பாக இந்­நாட்டில் நடை­பெற வேண்­டு­மென்­பதே எனது ஆவ­லாகும்.

அந்த வகையில் இத்­தேர்­தலில் புதி­ய­வர்­க­ளுக்கு இட­ம­ளித்து கிழக்கில் தேங்கிக் கிடக்கும் முக்­கிய அபி­வி­ருத்­தி­களை மூவி­ன­மக்­களும் வாழும் கிழக்கு மாகா­ணத்தில் சிறப்­பாக முன்­னெ­டுத்து செய்து முடிக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யாக செயற்பட்­டுக் கொண்­டி­ருக்­கிறேன்.

அந்­த­வ­கையில் ஒவ்­வொரு தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் போட்­டி­யிடும் நான் சார்ந்த கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்கு எனதும் எனது ஆத­ர­வா­ளர்­க­ளினதும் ஆத­ரவும் சிறப்­பாகக் கிடைக்கும், என்­பதில் எந்­தச்­சந்­தே­க­மு­மில்லை. பிர­சா­ரத்­திலும் ஈடு­படத் தயா­ராக இருக்­கிறேன்.

நாட்டில் சமா­தா­னமும், அமைதியும் மேலோங்க எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் இந்த தேர்தலில் முகம்கொடுக்குமாறு சகல வேட்பாளர்களையும் பொதுமக்களையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்றவகையில் கேட்டுக்கொள்கிறேன். என்றும் அவர் தெரிவித்தார்.