கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு வடமாகாண சபை சில பரிந்துரைகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இணைத்துக் கொள்ள வேண்டிய சில பரிந்துரைகளை வடமாகாண சபை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உறுதி செய்யும், அதி உச்ச அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி வலயங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.