தபால் மூலம் வாக்களிப்பதற்காக 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
தேர்தல் கடமையில் ஈடுபட எதிர்ப்பார்த்துள்ள அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஐந்து இலட்சத்து 25,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிகை தற்போது இடம்பெற்று வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை கடந்த 14 ஆம் திகதி நிறைவு பெற்றது. இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை ஏற்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாத அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.