கூட்டமைப்பின் கபடத்தன அரசியல் தமிழர்கள் மத்தியில் இனிமேல் பலிக்காது – செல்லையா இராசையா
தேர்தல் காலங்களில் அழகு தமிழில் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை கபடத்தனமாகப் பெற்று அரசியல் நடத்தும் காலம் இனிமேலும் தமிழ் மக்கள் மத்தியில் பலிக்காது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா குறிப்பிட் டார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுடனான சந் திப்பு ஆலையடிவேம்பு பிரதேசத் தில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
பலவருடங்களாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களைச் சீரழித்த அரசியல் தலைமையை எமது மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். ஆண்டுக்கொருதடவை, ஆவணிக்கொரு தடவை நுனிப்புல் மேய்வது போல் இங்கு வந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு சிலரிடம் கேட்டறிந்து கொள்வதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கைவந்த கலையாகும்.
அநேகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள் தமது சொந்த உழைப்பில் இருந்து மக்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. இதனை இன்று மக்கள் சீர்தூக்கிப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் அழகாக தமிழர்களின் பாதிப்பு நிகழ்வு பற்றி தெளிவுபடுத்துவார்கள். அந்த விஞ்ஞாபனப்படி இன்று வரை நடந்ததில்லை. அல்லது அதனைப் பின்பற்றுவதில்லை.
இவர்களின் அழகு தமிழ் வார்த்தைகளை நம்பி வாக்களித்த எமது தமிழ் மக்கள் மிகவும் நொந்தது மட்டுமன்றி, அவர்களுடைய நில புலன்களை யும், கிராமங்களையும், உடமைகளையும், இழந்து ஏழ்மையாக வாழ்வது மட்டுமே இன்று மீதமாக வுள்ளது. இதை சீர்தூக்கிப் பார்த்துத்தான் நாங்கள் அரசியல் மாற்றம் தேவை என்கிறோம்.