Breaking News

சுசிலை பிரதமராக மைத்திரி ஆலோசனை

ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றால் அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டார ங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் சுசில் பிரேமஜயந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ம.சு.மு. தேர்தலில் தோல்வியடைந்தால் சுசில் பிரேமஜயந்த எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலமாக குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை கட்டுப்படுத்த முடியும் என மைத்திரிபாலவுக்கு நெருக்கமானவர்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால, பரதமர் பதவிக்கு நியமிக்கப்படக்கூடிய சிரேஷ்ட தலைவர்கள் பலர் ஐ.ம.சு.மு.வில் உள்ளனர் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.