வராலற்றில் மிகப் பெரிய அரசியல் துரோகத்தை ஜனாதிபதி இழைத்துள்ளார்
அண்மைய வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழைத்துள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றியீட்ட மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட முயற்சியை 6.2 மில்லியன் மக்கள் முறிடியத்தனர் எனவும் அவர்களுக்கு அரசியல் பின்புலம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு வாக்களித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மஹிந்தவின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பாரியளவு ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்கள் அம்பலமாகத் தொடங்கியதாகவும், மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்தவர்கள் தங்களது தீர்மானம் சரியானது என கருதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பாரிய அச்சுத்தல்களையும் தாண்டி சிலர் தனிப்பட்ட நபர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக பகிரங்கமாக விமர்சனங்களை வெளியிட்டனர்.
பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் ஜனாதிபதி மைத்திரி ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.இந்த துரோகச் செயலைக் கண்டு அர்ப்பணிப்புச் செய்தவர்கள் மனம் தளரத் தேவையில்லை எனவும் மஹிந்தவிற்கு எதிரான போராட்டத்தை ஜே.வி.பி தொடரும் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.