தொலைக்காட்சிகளின் முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்!
தமிழ் தொலைக்காட்சிகளுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தற்போது ஒரு பிரச்சனை போய் கொண்டிருக்கிறது.
அதாவது ஒரு படத்தை எடுத்த முடித்த பின் அதன் தொலைக்காட்சி உரிமையை விற்று விட்டால் தயாரிப்பாளருக்கு ஒரு மிகப்பெரிய சுமை தீர்ந்துவிடும், இதனால் பல சின்ன தயாரிப்பாளர்கள் பலன் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக எந்த ஒரு படத்தையும் எந்த தொலைகாட்சியும் வாங்கவில்லை, இதில் சில பெரிய படங்களும் அடங்கும். எதனால் தொலைக்காட்சி நிறுவனங்களின் இந்த திடிர் மாற்றம் என்று விசாரித்தால் " அவ்வளவு விலை கொடுத்து நாங்கள் வாங்குகிற படத்தை விளம்பரப்படுத்தி போட்ட பணத்தை திரும்ப எடுக்கவே முடியவில்லை என்கிறது அவர்கள் தரப்பு .
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலகம் இனி எந்த தொலைக்காட்சி புதுப்படங்களை வாங்கவில்லையோ, அந்த தொலைக்காட்சிக்கு எந்த காட்சிகளும், டிரைலரும் கிடையாது என்று கூறிவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.
இதில் மிகவும் கடுப்பான அனைத்து தொலைக்காட்சி உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்து இனி ஒரு வருடத்துக்கு எந்த படத்தையும் யாரும் வாங்க மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர். இதை பற்றி விரைவில் செய்தி வரும் என்கிறாகள்.