யாழில் கஞ்சா விற்பனை செய்த ஐவருக்கு விளக்கமறியல்
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்களை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரிப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து நுணாவில் பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன் பொலிஸார் அவரிடமிருந்து 5 கஞ்சாப் பொதிகளைகயும் கைப்பற்றியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நாவற்குழி மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களிலிருந்து நால்வரைக் கைதுசெய்த சாவகச்சேரிப் பொலிஸார் அவர்களிடமிருந்து கஞ்சாப் பொதிகள் மற்றும் நீண்ட வாள் ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் ஐவரையும் சாவகச்சேரியிலுள்ள நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, சந்தேக நபர்கள் ஜவரையும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.