வேட்பு மனு தொடர்பில் வவுனியாவில் கூட்டமைப்பு விசேட கூட்டம்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளு க்கிடையில் வேட்பாளர்களை பங்கீடு செய்வது தொடர்பாகவும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் இன்று வவுனியா இன் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்;திரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.