Breaking News

நீதியான தேர்தலை நடத்துவதற்கு தமது முழு ஆதரவும் வழங்கப்படும்

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக செயற்படும் அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் அச்சுறுத் தல்கள் சம்பந்தமாக இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளும் தமது சங்கத்திற்கு பதிவாகியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைத் தெரிவித்தார். 

இதேவேளை இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாத வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தமது முழு ஆதரவினையும் வழங்குவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.