என்னுடைய தலைமையிலேயே சுதந்திரக் கட்சிக்கான தேர்தல் பிரச்சாரம்: மகிந்த அதிரடி அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலைமையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான தேர்தல் பிரசாரங்கள் தன்னுடைய தலைமையிலேயே நடைபெறும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிரடியாக அறிவித்திருக்கின்றார்.
நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்துவெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ, “இன்று மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்றார்கள். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களுக்கு நான் தலைமை தாங்குவேன். இத்தேர்தலில் வெற்றி பெற்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்போம்” எனவும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்திலில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுகின்றார். தேர்தலில் வெற்றிபெற்றால், மகிந்த ராஜபக்ஷதான் பிரதமர் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றார்கள்.