Breaking News

புலிகளை தலை தூக்க விடமாட்டோம் : சம்பிக்க நம்பிக்கை

விடுதலைப்புலிகள் தலைத்தூக்க முடியாதவாறு ஒடுக்கப்பட்டு விட்டாதாகவும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் புலிகள் தலைத்தூக்கிவிடுவார்கள் என தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாதெனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கம் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் மீண்டும் தலைதூக்கிவிடுமென தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் கிடையாது. இனியும் அவர்களுக்கு தலைதூக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.