கூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, “ஒரே நாட்டுக்குள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாழ முடியாத நிலை ஏற்படுவதை ஐதேக அனுமதிக்காது.
சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளின் இணக்கப்பாட்டுடன், ஒன்றுபட்ட பிரிக்கப்படாத இலங்கைக்குள், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதே, ஐதேக மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கையாகும்.சமஸ்டி முறையிலான தீர்வை நாங்கள் ஏற்கமாட்டோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை. முன்னைய தேர்தலிலும் அவ்வாறு உடன்பாடு செய்யப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.