Breaking News

ரஜினியை இழிவுபடுத்தும் பவர் ஸ்டார்? கோபத்தில் ரஜினி ரசிகர்கள்

லிங்கா படம் நஷ்டஈடு கேட்ட வந்த விநியோகஸ்தர்கள் இணைந்து ஒரு புதுப் படம் தயாரிக்க இருக்கின்றனர்.

லிங்கா பட சர்ச்சையை மையமாக வைத்து தயாராகவுள்ள இப்படத்தில் ரஜினியை அவமதிப்பது போன்று காட்சிகள் இடம் பெறுவதாகவும் ரஜினி வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

அதோடு அவரை வைத்து ரஜினியை கேலி செய்யும் காட்சிகளை எடுக்கிறார்களாம்.

தற்போது இதுகுறித்து பவர் ஸ்டார் கூறுகையில், லிங்கா விநியோகஸ்தர்கள் எடுக்கும் படத்தில் நான் கதாநாயகனாக நடிப்பது உண்மைதான். முழுக்க முழுக்க காமெடி படமாக தயாராக இருக்கிறது.

இந்த படத்தில் ரஜினியை அவமதிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை. இதை நிபந்தனையாக வைத்துதான் இந்த படத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார்.