Breaking News

அமெரிக்காவுக்கு அடிபணிந்தே ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு - வாசு

ஒற்­றை­யாட்­சிக்குள் இந்­திய மாநி­லங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களைப் போன்று மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­வதே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொள்கைப் பிர­க­ட­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முக்­கிய அம்­ச­மாகும் எனத் தெரி­வித்த முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார,

அமெ­ரிக்­காவின் அழுத்­தத்­திற்கு அடி­ப­ணிந்தே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஐ.தே.க.வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் அவர் குற்றம் சாட்­டினார்.இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில், அதி­காரப் பர­வ­லாக்­கலை நாம் எதிர்க்­க­வில்லை. மாகாண சபை­க­ளுடன் ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரத்தை பர­வ­லாக்­குவோம்.

அவ்­வாறு அதி­கா­ரத்தை பர­வ­லாக்கும் போது இந்­தி­யாவில் மாநி­லங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களைப் போன்று அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும்.

இது விட­யத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இணக்­கப்­பாடு கண்­டுள்­ள­தோடு அதன் கொள்கைப் பிர­க­ட­னத்­திலும் இது உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கு­வது தொடர்­பாக ஐ.தே.க.விடம் நிலை­யான கொள்­கை­யில்லை. சமஷ்டி முறையில் தீர்­வு என்றும் ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வு என்றும் மாறு­பட்ட நிலைப்­பா­டு­களில் ஐ.தே.க.பய­ணிக்­கின்­றது.

வர­லாற்றுக் காலம் அதா­வது சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் ஐ.தே.க. ஆட்சிக் காலத்­தி­லேயே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­டாது மறுக்­கப்­பட்­டது. பண்டா – செல்வா ஒப்­பந்­தத்தை அமுல்­ப­டுத்த முடி­யாமல் அதனை ஐ.தே.க.வே தடுத்­தது. 1983 இல் ஜூலை இனக்­க­ல­வ­ரத்தை ஏற்­ப­டுத்தி வடக்கு தமிழ் மக்­களை அடக்கு முறைக்­குள்­ளாக்கி அங்­குள்ள இளை­ஞர்­களை ஆயுதப் போராட்­டத்­திற்கு தள்­ளி­விட்­டது.

இவ்­வாறு தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றையை ஐ.தே.க.வே கட்­ட­விழ்த்து விட்­டது. இன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அமெ­ரிக்­காவின் அடக்கு முறைக்கு அடி­ப­ணிந்­துள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஆட்­சியை பெற்றுக் கொடுத்து தமக்கு தேவை­யான விதத்தில் இலங்­கையில் ஆட்­சியை வழி ­ந­டத்­து­வதே அமெரிக்காவின் திட்டமாகும்.

அதற்காகவே கூட்டணி மீது அமெரிக்கா அழுத்தம் ஆதரவு வழங்கச் செய்துள்ளது.மஹிந்த ராஜபக்ஷ இனவாதியல்ல என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.