Breaking News

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு தயாராக இருக்கிறோம் -மஹிந்த

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நியா­ய­மான கோரிக்­கைகள் குறித்து ஆராய்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். ஆனால் நாட்டை பிரிப்­ப­தற்கு இட்டுச் செல்லும் கோரிக்­கை­களை நிரா­க­ரிக்­கின்றோம் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

மாத்­த­ளையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சாரக்கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நியா­ய­மான கோரிக்­கைகள் குறித்து பரி­சீ­லிக்­க­வேண்டும் என்­பதே எனது நிலைப்­பா­டாகும். தமிழ் மக்கள் முகம்­கொ­டுக்­கின்ற பிரச்­சி­னைகள் குறித்து நியா­ய­மான ரீதியில் ஆரா­ய­வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைக்­கின்ற நாட்டை பிரிப்­ப­தற்கு இட்டுச் செல்லும் கோரிக்­கை­களை நிரா­க­ரிக்­கின்றோம். அவற்றை நாங்கள் தவிர்க்­கின்றோம் என்றார்.

கடந்த சனிக்­கி­ழமை தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை முன்­வைத்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சமஷ்டி முறை­மையில் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை எதிர்­பார்ப்­ப­தாக தெரி­வித்­தது.

நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒன்று பட்ட இலங்­கைக்குள் சமஷ்டிக் கட்­ட­மைப்பின் ஊடாக அதி உச்ச அதி­கா­ர­ப­கிர்வே தீர்­வாக அமையும் என தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கடந்த தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

 அத்­துடன் தமிழ் பேசும் மக்­களின் வரலாற்று ரீதி­யான வாழ்­வி­டப்­ப­கு­தி­க­ளான
வடக்கு, கிழக்கில் சுய­நிர்­ணய உரிமையின் பிர­காரம் இந்தத் தீர்வு அமையவேண்டு மென்றும், இதுவே நாட்டின் இனப்பிரச் சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.