வடமராட்சியில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட அதிர்ச்சி (புகைப்படங்கள்)
யாழ் தேர்தல் பரப்புரை கூட்டத்தை அடுத்து
நேற்று வடமராட்சி பருத்தித்துறையில் ஒழுங்கு படுத்தப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்திற்கு மிகக்குறைந்தளவு மக்களே கலந்து கொண்டிருக்கின்றனர். வரலாறுகாணாத சனக்கூட்டம் வருமென எண்ணிய சுமந்திரனுக்கு வடமராட்சி மக்கள் நல்ல முடிவை நேற்று சொல்லியிருக்கின்றனர்.
கூட்டத்திற்கு வருகைதந்து மேடையை நோக்கி செல்லும்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கையை பிடித்து சென்றால் கொஞ்சம் தமிழ்த் தேசிய வாக்குகள் கிடைக்கும் என எண்ணிய சுமந்திரன் அவரின் கையை பிடிப்பதற்காக கையை கொண்டு சென்றபோது சடுதியாக சுதாகரித்துகொண்ட சிறிதரன் தனது கையை பின்னுக்க எடுத்ததும் கடுப்பாகிவிட்டாராம் சுமந்திரன்.
இந்த கூட்டத்திற்கு நாயகனாக திகழ இருந்த சுமந்திரனுக்கு தலைவன் பிறந்த மண்ணிலே ஏற்பட்ட முதலாவது புறக்கணிப்பு இதுவாகும். வடமராட்சியில் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் வருவார்கள் சுமந்திரனின் சாணக்கிய நகர்வுகள் தொடர்பில் மக்களுக்கு விளக்குவதற்கு வந்திருந்த தலைவர் இரா சம்பந்தன் ,கிழக்கு மாகாண அமைச்சரும் தமிழரசு கட்சி செயலாளருமான துரைராஜசிங்கம், தமிழரசு கட்சி தலைவர் திரு மாவை சேனாதிராஜா ,திரு சிறிதரன் ஆகியோர் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக அறிய வருகின்றது.
அண்மையில் கூட்டங்களுக்கு செல்லும் சுமந்திரனை மக்கள் துருவி துருவி கேள்வி கேட்பதும் எதற்காக சுதந்திரதினத்திற்கு போனீர்கள்,வாகனம் வாங்கியது உண்மையா போன்ற கேள்விகளை கேட்பதும் அதற்கு சுமந்திரனின் ஆணவமான பதில்களும் மக்களை இன்னும் வெறுப்படைய வைத்திருப்பதாக அறிய வருகின்றது.
சந்திப்பில் மக்கள் கேட்ட கேள்விக்கு சின்னக் கதிர்காமரின் பதில் |
இதனைவிட வடமராட்சியை மையப்படுத்தி இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கும் எம்.ஏ.சுமந்திரன், முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும் வேட்பாளருமான அனந்தராஜா, மற்றய வேட்பாளரான மதனி ,மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஆனல்ட், சுகிந்தன் மற்றும் பருத்தித்துறை நகரசபை தலைவர் சபா ரவீந்திரன், பருத்தித்துறை பிரதேசசபைத் தலைவர் சஞ்சீவன் மற்றும் தமிழரசுகட்சி முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டபோதும் கூட்டத்திற்கு வந்திருந்த 4முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் 3மாகாணசபை உறுப்பினர்களும் நகரசபை ,பிரதேசசபை தலைவர்களும் அவர்கள் வந்த வாகனங்களையும் அவர்களோடு வந்த உதவியாளர்களையும் தவிர பொதுமக்களாக கலந்துகொண்டவர்கள் ஐம்பது பேருக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ஈ.பி.டி.பி யின் வாக்கு வங்கியான தீவகத்திலும் ஐ.தே.கட்சி போட்டியிடும் இடங்களிலும் அக்கறைகாட்டாத கூட்டமைப்பு தலமைகள் த.தே.மக்கள் முன்னணியை ஒரு ஆசனமும் பெறக்கூடாது என்பதற்காக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போட்டியிடும் பகுதியில் சுமந்திரனோடு மாதனி மற்றும் அனந்தராஜா ஆகியோரை களமிறக்கி வடமராட்சியை முடிசூட எடுத்த நகர்வு மிகவும் பின்னடைவை கொடுத்திருக்கிறது.
இதற்கு இவர்களால் தெரிவு செய்யப்பட்ட மதனி என்பவர் பிரபலமில்லாதவராகவும் ஏற்கனவே நகரசபையின் தலைவர் சபா ரவீந்திரன் மாகாணசபைக்கு வேட்பாளர் தெரிவில் இடம் கிடைக்காதபோதும் பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து அதுவும் கிடைக்காததால் அவரும் வெறுப்படைந்திருக்கிறார்.
அதே போல அனந்தராஜா கடந்த பல ஆண்டுகளாக வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்தபோதும் அவரும் ஏனைய உறுப்பினர்களுடன் ஒத்து போகாததால் வரவுசெலவுத்திட்டம் பலமுறை தோற்கடிக்கப்பட்டதால் சபையை முதலமைச்சர் ஏற்கனவே கலைத்துவிட்டார். அத்தோடு இவருக்கும் திரு சிவாஜிலிங்கத்துக்கு மிடையில் நல்ல உறவுநிலை இல்லாமை போன்ற காரணங்களாலேயே இவர்களின் உள்ளக ஆதரவாளர்களே குழப்பமான நிலையில் இருப்பதாக அறியக்கிடைக்கிறது.
கையை தாங்கோவன் சிறி நாங்கள் ஒண்டுதானே |
...ம்...உங்களுக்கு கைகொடுத்தால் மக்கள் என்னை பிழையா பாப்பினம் |
தொடர்புடைய முன்னைய செய்திகளை பார்வையிட