Breaking News

இனப்பிரச்சினை தீர்வுக்கு சமஷ்டி முறைமை ஒருபோதும் பொருந்தாது ஜே.வி.பி தெரிவிப்பு

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­கத்­தில்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சமஷ்டி முறை­மையை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைத்­துள்­ள­தெனின் இந்த முறை­மையில் ஒரு­போதும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யாது என்று மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

இந்த நாட்­டுக்கு சமஷ்டி முறைமை பொருந்­தாது. ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தீர்வை பெற்­றுக்­கொள்வோம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரி­வித்­தது.

சமஷ்டி முறைமையில் இனப்­பி­ரச்­சி­னை­கான தீர்வை காண­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் ஜே.வி.பி யின் நிலை­பாட்டை  தெரிவிக்கும் போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இந்த நாட்­டுக்கு சமஷ்டி முறை­யி­லான ஆட்­சி­முறை ஒரு­போதும் பொருந்­தாது என்­பதில் மக்கள் விடு­தலை முன்­னணி தெளி­வான நிலைப்­பாட்டில் உள்­ளது. இந்த நாட்டில் ஏற்­பட்­டுள்ள பிரி­வி­னை­வாதக் கொள்­கைக்கும் தமிழ், சிங்­கள அர­சியல் முரண்­பா­டு­க­ளுக்கும் சமஷ்­டியே கார­ண­மாக அமைந்­துள்­ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தமது தேர்­தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­தி­ருக்கும் சமஷ்டி முறை­யி­லான அதி­கா­ரப்­ப­கிர்­வா­னது வடக்கு கிழக்கில் வாழும் மக்­களின் நன்­மைக்­காக அல்ல. மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­கத்தில் தான் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சமஷ்­டியை முன்­வைத்­துள்­ள­தாயின் அது ஒரு­போதும் தீர்­வாக அமை­யப்­போ­வ­தில்லை. சமஷ்டி முறை­யினால் வடக்கு மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்கப் போவ­தில்லை. மாறாக இருக்கும் பிரச்­சினை மேலும் அதி­க­ரிக்கும்.

அதேபோல் இப்­போது இருக்கும் நிலையில் நாம் தனித்து போராடி எதையும் சாதிக்க முடி­யாது. தமிழ் மக்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது. அவர்­க­ளது பல கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை. கடந்த காலங்­களில் மிகவும் நெருக்­கடி சூழலில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்­துள்­ளனர். ஆகவே அவர்­க­ளுக்­கான விடு­த­லை­யினை பெற்றுக் கொடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். 

அதேபோல் சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுக்கும் பிரச்­சி­னைகள் உள்­ளன. அவை அனைத்­தையும் ஒன்­றி­ணைந்து தீர்க்க வேண்டும். எனவே ஒவ்­வொரு இனத்­த­வரும் தத்­த­மது பிரச்­சி­னைக்­கான தீர்வை தனித்து வென்­றெ­டுக்க முடி­யாது. அனை­வரும் ஒன்­றி­ணைந்து இன, மத பேதம் இன்றி உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும்.

சமஷ்டி முறைமை ஒரு போதும் தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு இல்லை. தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வை வேறு விதத்தில் தான் கையாள வேண்டும். அர­சியல் சுய­ந­லத்­துக்­காக மக்­களை காவு­கொ­டுக்கும் வேலை­யினை தமிழ் தலை­மை­களும், சிங்­கள தலை­மை­களும் கைவிட வேண்டும். அதேபோல் நாட்டை பிரிக்கும் எந்த வேலைத் திட்­டத்­துக்கும் மக்கள் விடு­தலை முன்­னணி துணை போகாது. கடந்த காலத்தில் இலங்­கையில் மிகவும் மோச­மா­ன­தொரு ஆயுதப் போராட்டம் நடை­பெற்­றது. 

அதை முடி­வுக்கு கொண்­டு­வந்­ததில் முரண்­பா­டுகள் இருந்­தாலும் இப்­போது யுத்தம் இல்­லாது அமை­தி­யான ஒரு நாடு எமக்குக் கிடைத்துள்ளது. ஆகவே இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களை அமைதியாக வாழவிட வேண்டும். கடந்த காலத்தில் முன்னெடுத்து வந்த பிரிவினை கோட்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல மக்கள் அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.