உள்ளக விசாரணை அறிக்கை ஓகஸ்டில்!
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணையின் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாத பிற்பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப் படவுள்ளது.
மேற்படி அறிக்கையை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக, காணாமல் போனோரை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பேரவையின் அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.