தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சிசிர மென்டிஸ் நாளை பதவியேற்கிறார்
ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது பதவியை ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளராகவும் சிசிர மென்டிஸ் பதவி முன்னர் பணியாற்றியிருந்தார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவுடன், அவர் பதவியில் இருந்து விலகியிருந்தார். அந்த வெற்றிடத்துக்கே, ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.