மஹிந்த நால்வருக்கு நிபந்தனைக் கடிதங்களை அனுப்பியுள்ளார்
வெளிவிவகார அமைச்சர மங்கள சமரவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, அனுர குமார திஸாநாயக்க மற்றும் நாடோடிகளின் தலைவரான சுனில் பெரேரா ஆகியோருக்கு, நிபந்தனைக் கடிதங்களை, குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ளார்.
இவர்கள் தமக்கு எதிரான, அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்கள் என்று தெரிவித்தே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.