Breaking News

நாடு துண்டாடப்படுவதை தடுப்பதற்காகவே ரணிலுடன் கூட்டணி அமைத்தோம் – சம்பிக்க

நாடு துண்டாடப்படுவதை தடுப்பதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டோம் என்று ஐக்கிய நல்லாட்சி தேசிய முன்னணி செயலாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.



ஹோமாகம பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டை துண்டாடும் திட்டத்தை மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவங்ச ஆகியோருடன் தயாரிக்க ஜீ.எல்.பீரிஸ் நடவடிக்கை எடுத்தார். இதனை வீதியில் இறங்கிப் போராடி நாமே தோற்கடித்தோம். இதன் மூலமே நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டது.

நாட்டை துண்டாடும் நடவடிக் கையிலிருந்து நாட்டை பாதுகாக்கவே டிசம்பர் 10ம் திகதி நாம் மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்தோம். நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே பிரதமருடன் உடன்பாட்டை ஏற்படுத்தினோம். எதிர்காலத்திலும் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.-என்றார்.