இரண்டு கால்கள் இல்லாவிட்டாலும் பறவாயில்லை தலை மட்டுமே போதும் – பிரபாகரன் (காணொளி இணைப்பு)
இரண்டு கால்கள் இல்லாவிட்டாலும் பறவாயில்லை உங்கள் தலை மட்டுமே போதும். எனவே உங்கள் பணி எமது மக்களுக்கு வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்து ள்ளார்கள்.
என தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளர் பிரபாகரன் அவுஸ்திரேலியாவின் தமிழ்க்குரல் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் பங்குகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் முன்னர் தமிழரசுக்கட்சிக்கும் அதன் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் கடந்த காலங்களில் வேலை செய்தவன். இரண்டு கால்களையும் எனது கையிலும் நான்கு விரல்களையும் இழந்தவன். இன்று புதுக்குடியிருப்பில் வாழ்ந்துவருகின்றேன்.விடுதலைப்போராட்டப்பணி செய்த நான் தொடர்ந்தும் அப்பணியை செய்வேன் எனவும் உறுதி கூறினார்.